155
காஷ்மீரில் இந்திய ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அண்மையில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையானது உள்நோக்கத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ளதென இந்திய ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில், உலக அளவில் இந்திய ராணுவத்துக்கு பிரத்யேக இடம் உண்டு. இது, காஷ்மீர் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் நன்கு தெரியும். எனவே, ஐ.நா. அறிக்கை குறித்து கவலைப்பட தேவையில்லை. ஐ.நாவின் அறிக்கையானது காஷ்மீரில் நிலவும் சூழலுக்கு முற்றிலும் புறம்பானதாகவும், பொய்யானதுமான அரசியல் எனவும் விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
Spread the love