204
இந்திய முன்னாள் கிரிக்கெட் தலைவர் சவுரவ் கங்குலி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இரு நாடுகளுக்குமிடையே இடையிலான மூன்று ரி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டரை மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த தொடரை இந்தியாவில் ஒளிப்பரப்பு உரிமை பெற்றுள்ள தொலைக்காட்சி நிறுவனம் கங்குலி வர்ணனையாளராக நியமித்துள்ளது.கங்குலியுடன் சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஸ்வான் ஆகியோரும் வர்ணனையாளராக செயல்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love