190
நைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாரவூர்தியிலிருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியதனையடுத்து தீப்பிடித்ததாகவும் குறித்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்குகள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love