குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் ஒருவர் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு விடுதலைப் புலிகளின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான உளவாளிகள் அந்த இயக்கத்திற்கு உள்ளே இன்னும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் அதுபோன்ற ஒரு உளவாளிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், அவர் விளக்கமறியலில் இருந்து வெளியே வந்ததும் கொலை செய்யப்படலாம் என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.