அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருத்த மசோதா தோல்வியை தழுவியுள்ளது. டிரம்ப் அறிமுகப்படுத்திய இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறுவதற்கு அதிகபட்ச திறமை தேவைபடும் என்பதுடன் அமெரிக்க நிறுவனங்களில் உயர்பதவிகளில் அமெரிக்கர்களே நியமிக்கப்படமுடியும்
இந்த மசோதாவை நேற்றையதினம் ட்ரம்ப் அவையில் தாக்கல் செய்தநிலையில் மசோதாவிற்கு ஆதரவாக 121 பேரும் வாக்களித்து எதிராக 301 பேரும் வாக்களித்துள்ளமையால் மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த சிலரும் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.