குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிச்சை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிசை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர் உறவான வரதராஜன் என்பவரும் லண்டன் யுளளளைவ சுசு அமைப்பும் இணைந்து 8 மில்லியன் பெறுமதியான இவ் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். இதில் வரதராஜன் என்பவரின் நிதி உதவியில் அதி நவீன எக்கோ இயந்திரத்தினை ஆறு மில்லியன் ரூபாவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் இதய நோய் பரிசோதனைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கு கிளிநொச்சியிலிருந்து நோயாளிகள் யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைகளுக்கே அனுப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ் பெறுமதிமிக்க மிக அவசியமான உபகரணங்களை வழங்கி வைத்து புலம் பெயர் உறவுகளுக்கு மாவட்ட வைத்தியாசலை சார்பாகவும், கிளிநொச்சி மக்கள் சார்பாக தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வைத்தியசாலை பணிப்பாளர் மைதிலி தெரிவித்தார்
பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் மைதிலி, லண்டன் இதயநோய் நிபுணர் மயூரன், கனகதுர்கை அம்மன் ஆலய நிர்வாகிகள் மருத்துவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அகியோர் கலந்துகொண்டனர்