காவிரி விவகாரம் தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையகம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையகத்தின் முதல் கூட்டம் எதிர்வரும் ஜூலை 2திகதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்ற இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையக கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது