தென்கொரியாவின் சியோல் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகள் சிங்கப்பூரில் சந்தித்து பேசியதன் பின்னர் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது.இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில், அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளதையடுத்து சியோலில் இருந்த ராணுவ முகாமை அமெரிக்கா மூடியுள்ளது.
இந்த ராணுவ முகாம் கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின், தென்கொரியா, அமெரிக்கா இடையேயான நட்புறவால் அந்த முகாம் தொடர்ந்து நீடித்து வந்தது.
தற்போது இந்த ராணுவமுகாம் மூடப்பட்டதன்மூலம் 70 ஆண்டு காலமாக செயல்பட்டுவந்த அமெரிக்க ராணுவத்தினரின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது