லிபியாவின் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும், 100 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபோலியின் காரபவுலியில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்ட இந்தப் படகின் இயந்திரம் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதனால் படகில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக படகில் நீர் புகுந்தமையால் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட லிபியாவின் கடலோர பாதுகாப்பு படையினர் 16 பேரை மீட்டுள்ளனர். படகில் மொத்தம் 120 அகதிகள் சென்றுள்ள நிலையில் 100 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, சம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.