167
ராஜஸ்தானில் சிரோகி மாவட்டத்தில் சுரங்கப்பாதையை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சுரங்கப்பாதையை சரி செய்யும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது பொக்லைன் இயந்திரத்தின் அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழந்தவர்களுக்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்து குறித்து நிறுவன உரிமையாளர் மற்றும் பொக்லைன் சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Spread the love