ஊழல் மூலம் சம்பாதித்து சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை நைஜீரிய அரசாங்கம் தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது . நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தினையே இவ்வாறு ஏழைக் மக்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது
300 மில்லியன் டொலர்கள் பணத்தினை சுவிஸ் வங்கி அதிகாரிகள் திருப்பிக் கையளித்த பின்னர் அடுத்த மாதம், உலக வங்கியின் மேற்பார்வையில், சிறு சிறு தொகையாக தவணை முறையில் மக்களுக்கு பிரித்து அளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
1990களில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதுடன் ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டொலர்களைப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்களைக் கவருவதற்காகவே நைஜீரிய அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக விமானங்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.