இந்திய தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில், பூட்டிய வீட்டில் இருந்து, ஒரே குடும்பத்தைவச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுப்பர் மார்கெட் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயோதிபப் பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களை காவற்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.