கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அந்நாட்டின் சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இந்துக்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக இவர்கள் சென்று கொண்டிருந்த போது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் அங்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியி;டவிருந்த ஒரே சீக்கிய வேட்பாளரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் ஜனாதிபதி அஷ்ரப், மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்துள்ளார் என்ற போதிலும் தாக்குதல் நடைபொற்ற சமயத்தில் அவர் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களும், இந்துக்களும் குறைந்த அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது