Home இலங்கை வெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்…

வெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்…

by admin


வெளிநாட்டமைச்சர் மாரபபன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வடமாகாணமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், கச்சேரியில் நேற்று (02.07.18) மதியமளவில் ஒருவிசேட கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். கூட்டத்தைக் கூட்டுமாறு அரசாங்க அதிபருக்கு கௌரவதிலக் மாரபன கோரிக்கைவிடுத்திருந்தார்.

கூட்டத் தொடக்கத்தில் மாரபன கூட்டத்தின் காரணத்தை அறிவித்தார். தான் அண்மையில் ஃப்ரசல்ஸ் (Brussels)  சென்றிருந்ததாகவும் வடமாகாணத்தில் காணிகள் திருப்பிக் கொடுப்பது ஆமைவேகத்தில் செல்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட பலமக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதாக அமைச்சர் அறிவித்து அதுசம்பந்தமான உண்மையினை அறியவே தான் வடமாகாணம் வந்ததாக அறிவித்தார்.

அரசாங்க அதிபரிடம் இது பற்றிக் கேட்டார். விடுவித்தகாணிகளில் எல்லாம் மக்கள் மீள் குடியேறியதாக வேதநாயகன் தெரிவித்தார். அதைமறுத்த முதலமைச்சர்;, பலகாரணங்களால் மக்கள் மீள் குடியேறவில்லை என்பதை எடுத்துரைத்தார்.

1. காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் தமக்குக் கிடைக்காததால் வீடுகட்ட முடியாமல் காணியில் குடியேறாமை.

2. காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருப்பதால் தமது காணிகளில் மீள்குடியேற முடியாதநிலை.

3. விடுவித்தும் சிலகாணிகளை இராணுவம் விட்டு எகாதபடியால் குடியேற முடியாமை.

போன்றகாரணங்களைக் கூறி ஒவ்வொரு காணிக்காரரிடமும் இது பற்றி அறிந்து கொண்டபின்னர்தான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும் என்று கூறினார்.

அடுத்து 82 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியதை மறுத்து 2009ல் இருந்து இந்தவிபரங்கள் தரப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி 2013ல் இருந்தே நாம் விடுவிக்கப்பட்ட காணி பற்றி பேசவேண்டும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது. அவ்வாறு பார்த்தால் சுமார் 50 வீத காணிகளே திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் மேலும் 50வீதம் திரும்பக் கையளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கௌரவமுதலமைச்சர் தம்வசம் இருக்கும் காணி பற்றிய ஆவணமொன்றை அமைச்சருக்கு அனுப்புவதாக கூறி வேறு கூட்டமொன்றுக்கு சென்றார். கூட்டம் மேலும் தொடர்ந்தது.

ஊடகப் பிரிவு
முதலமைச்சர் அலுவலகம்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More