குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் அதிகரித்த நிலையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்தவ பிரிவின் முயற்சியினால் நேற்று(2) திங்கட்கிழமை இரவு முதல் இன்று (3) செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாக குறித்த 26 குளவிக்கூடுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குளவிகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள நிலையில் தற்போது வரை சில மாணவர்களும் குளவிகளின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளனர். -குறித்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மடு கல்விப்பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்திருந்த நிலையில் இ வ்வாறு குழவிக்கூடுகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது