குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் – யாழ்ப்பாணம்… காணொளி இணைப்பு…
சிங்களம் தெரிந்தவர்கள் முழுமையாக கேட்க வேண்டியது… – றஞ்சன் றாமநாயக்கா VS விஜயகலா..
நட்பு ரீதியாக விஜயகலாவுக்கு எடுத்த, தனிப்பட்ட அழைப்பை ஊடக சந்திப்பில் போட்டுடைத்த றஞ்சன் றாமநாயக்க…
விமர்சனங்களுக்கு அப்பால் தனக்கு தெரிந்த சிங்களத்தில் யாழ்பாணத்தை படம் பிடித்து தெற்கிற்கு காட்டிய விஜயகலா
ஊடகங்கள் பொய்யை எழுதிவிட்டன என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கொழும்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார்.
அதன் போது மகளீர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கையடக்க தொலைபேசியில் இராஜங்க அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டார். அதன் போதே தனது கருத்து தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுத்த பின்னர் இராஜாங்க அமைச்சர் சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசி ஊடாக உரையாடினார். இந்த உரையாடலை ஊடக சந்திப்பில் வெளிப்படையாக அனைவரும் கேட்பதற்கு தொலைபேசியின் ஒலி அமைப்பை அழுத்தியுள்ளார். எனினும் இவ்வாறு ஊடக சந்திப்பில் விஜயகலாவுடனான உரையாடலை வெளிப்படுத்துவது பற்றி றஞ்சன் விஜயகலாவிடம் அனுமதி பெறவில்லை. இது தமிழர்களை பெரும்பான்மையினத்தவர் எவ்வாறு கிள்ளுக் கீரையாக பயன்படுத்துகிறார்கள் என்பதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு என பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட நடவடிக்கைகள், உரைகள், செயற்பாடுகள், அனுபவம் அற்ற அரசியல் நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் பேச்சுக்கள் என பல முரண்பாடுகளுக்கு அப்பால், றஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலில் வடக்கின் உண்மை நிலவரங்கள் பலவற்றை துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மக்களின் நிலை –
யுத்தத்தின் பின்னரான வறுமை..
யுத்தத்தின் பின்னரான வேலைவாய்ப்பின்மை..
யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடுகள்…
யுத்தத்தின் பின்னரான இரணுவம் – பொலிசாரின் அத்து மீறல்கள்..
யுத்தத்தின் பின்னரும் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை..
யுத்தத்தின் பின்னரான வாழ்வெட்டு கலாசாரமும் பின்னணியில் படையினர் இருப்பதும்…
யுத்தத்தின் பின்னராக போதைப்பொருட்களின் ஆதிக்கம்…
போதைப்பொருட் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் – பாதுகாப்பு தரப்பினரின் பங்கு…
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு…
என யாழ்ப்பாணத்தின் அவலத்தை தனக்கு தெரிந்த சிங்களத்தில் தெரிந்தோ – தெரியாமலோ – துணிந்தோ – துணியாமலோ கொழும்பின் ஊடகங்கள் கூடிய சந்திப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த உரையாடல் சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் குழைவாகவும், சில இடங்களில் நட்பாகவும் இருந்த போதும் இந்த உரையாடலில் தெறித்த பல விடயங்கள் தெற்கின் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உறைக்கக் கூடியவை என்பதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பகிரங்க வாக்குமூலமாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.. வழமைபோல் விஜயகலாவை கலாய்பதற்கு அப்பால் அவர் சொன்ன விடயங்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை…
1 comment
Why don’t you have this in tamil translation.
Dailymirror has the transltion in English only short.