156
தனது குரலால் மயக்கிய கூலித்தொழிலாளியை திரைப்பட இசையமைப்பாளர்கள் தேடி வருகின்றனர். விஸ்வரூபம் படத்தின் பாடலை பாடி சமூக வலைளத்தில் அதிகம் பிரசித்தமான இவரே தேடப்படுகின்றார். விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உனைக் காணாது’ என்ற பாடலை ஒரு தோட்டத்தில் அமர்ந்து கொண்டு இவர் பாடியுள்ளார்.
அவர் பாடலைப் பாடும் வீடியோவை மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பாடகர் ஷங்கர் மகாதேவனும் பார்த்துள்ளார். அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது.
கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டுள்ளார்.
இப்பதிவுக்கு பதிலளித்த ஒருவர் பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். விரைவில் அந்த நபருக்கு சங்கர் மகாதேவனுடன் பாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=ZzRqbwiC914
Spread the love