கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசில் நாள் பாடசாலை முதல்வர் கா. குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்றுறைத் தலைவர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகமும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கலந்து கொண்டனர்..
பரிசளிப்பு விழாவிற்கான ஏற்பாட்டை பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
கச்சாய் அ.த.க. பாடசாலையில் இவ்வாண்டு உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு கலைத்துறையில் 15 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஐந்து பிள்ளைகள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேற்பெற்றுச் சித்தி பெற்றிருந்தனர். இதேவேளை க.பொ.த. சாதாரணதரப் பெறுபேறுகளின் அடிப்படையில் (35 மாணவர்கள் வரையில் தோற்றி) 2015இல் 19 சதவீதமானவர்களும் 2016 இல் 30 சதவீதமானவர்களும் 2017 இல் 53 சதவீதமானவர்களும் சித்திபெற்றுள்ளனர். பாடசாலையின் சித்தி வீதம் அதிகரிப்பது குறித்துப் பலரும் மகிழ்ச்சி வெளியிட்டமையை அவதானிக்க முடிந்தது.