197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து காவற்துறையினருக்கான விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன. இந் நிலையில் காவற்துறையினர் மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றம்சாட்டி இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஆவா குழுவின் அட்டகாசங்கள் மற்றும் குற்றச் செயல்கள் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் காவற்துறையினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அனைத்துப் காவற்துறையினருக்குமான விடுமைறைள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love