இலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்பு நடவடிகைகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கவுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் திகதி வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையாகி போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
2015இல் இலங்கைமக்கள் , ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகள் போன்றலவற்றுக்கு எதிராகவும் மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு ஆதரவாகவும் ஆதரவளித்த போதும் அங்கு நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைச் சட்டிக்காட்டிய அவர் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலுமான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை இவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளர். மேலும் கடந்த காலத்தில் தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான ,லங்கையின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.