162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற நிகழ்வில் “மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் ” என உரை நிகழ்த்தி இருந்தார். குறித்த உரை தொடர்பில் தெற்கில் சிங்கள அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
அந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவிக்கும் போது , தான் தமிழ் மக்களுக்காக பதவியை துறக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
Spread the love
1 comment
பதவியைத் துறப்பதன் மூலம் தமிழ் மக்கள் மனங்களைக்
கவர்ந்து விட முடியாது.
‘நாக் குளறிவிட்டது’, என்றோ அன்றி, ‘கசப்பான நடப்பு
நிகழ்வுகள் காரணமாக வேதனையில் அரற்றி விட்டேன்’,
என்றோ கூறிச் சமாளிப்பதை ஏற்க முடியாது. முடிந்தால்,
‘சுய நினைவுடன், கடந்த கால நிலைமை குறித்தும், அன்றைய
ஆட்சியொன்று மலர்வதே நடப்பு அசம்பாவிதங்களுக்குத்
தீர்வாக அமையும், என்றுதான் கூறினேன்’,
எனக் கூற இவரால் முடியுமா?
ஹிட்லர் ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, என்று சொன்ன
பௌத்த பிக்குவின் கூற்றுக்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டாத
ஆட்சியாளர்கள், இன்று அதையே உதாரணமாகக் காட்டித் தாம்
தப்பித்தாலும், திருமதி. விஜயகலாவை மன்னிக்கப் போவதில்லை.
இவருக்கு எதிரான விசாரணை என்பதே ஒரு மறைமுக
அடக்கு முறையும், இன அவமதிப்பும், என்பதை மறுக்க முடியாது.