உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் தோல்வியடைந்ததனையடுத்து ஜப்பான் அணியின் தலைவர் மகரோஹசீபே ( Makoto Hasebe) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்துத் தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஜப்பான் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியிருந்தது.
இதையடுத்து தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர் ரஸ்ய உலகக் கிண்ணத்துடன் ; தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என அறிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் தோல்வி கண்டது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் பெல்ஜியத்துடனான போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
2010, 2014, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் ஜப்பான் அணிக்காக விளையாடியுள்ள ஹசீபே கடந்த 12 வருடங்களாக ஜப்பான் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.