குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீது சுமத்தியுள்ள நிதி தொடர்பான குற்றச்சாட்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை பத்திரிகை ஒன்று சுமத்திய குற்றச்சாட்டுக்கு இணையான பொய்யான குற்றச்சாட்டு என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி இலங்கை பத்திரிகையில் வெளியான செய்தி. இது குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முறைப்பாடு செய்த பின்னர், அது தொடர்பான விடயம் மீண்டும் பரபரப்பானது.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பெய்யான நிதி குற்றச்சாட்டை சுமத்திய கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் மாரியா அபி. ஹபீப் மற்றும் மைக்கல் ஸ்லேப்ட் ஆகியோர் இலங்கைக்கு வந்து உண்மையான மற்றும் தவறின்றிய தகவல்களை வெளியிடுமாறு அழைப்பு விடுக்கின்றோம். அதற்கான செலவை ஏற்க கூட்டு எதிர்க்கட்சி தயாராக உள்ளது.
தேவை ஏற்பாட்டால், அவர்களிடம் இருக்கும் சரியான தகவல்களை அடிப்படையாக கொண்டு இலங்கையில் வழக்கு ஒன்றையும் தொடர முடியும் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.