210
மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தையில் அதிகளவான பட்டாசுகள் காணப்பட்ட நிலையில் நேற்றுக்காலை திடீரென்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கி குறைந்தது 24பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுமுள்ளது
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையின் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
Spread the love