பிரித்தானியாவில் பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் தாதியொருவருக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த 53 வயதான ஜோசப்பின் இயாமு என்ற குறித்த தாதி நைஜீரியாவைச் சேர்ந்த பெண்களை வசியப்படுத்தி ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், பிரித்தானிய குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் தாதியாக பணி புரிந்து வந்ததும், இவருக்கு மாந்திரிகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர் நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்களை தன் வலையில் விழ வைத்து மந்திரவாதி ஒருவர் மூலம் நடத்தப்படும் மாந்திரிக சடங்கில் பங்கேற்க செய்து மிகவும் வக்கிரமான சடங்குகளை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளார். அதன்பின்னர், அவர்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்தியமை விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடத்திய பெண்களை எங்கும் தப்பி ஓடிவிடக்கூடாது எனசும் காவசல்துறையிடம் முறையிடக் கூடாது எனவும் மிரட்டி வாக்குறுதி பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட இயாமு மீது பேர்மிங்காம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 10 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் கொண்ட குழு இவ்வழக்கை விசாரித்தது.சுமார் 10 வார காரலமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், இயாமு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத் 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது