188
கேரளாவில் பாஜக தொண்டரை கொலை செய்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் தலசேரியில் 2008-ம் ஆண்டு முச்சக்கரவண்டிச் சாரதியான மகேஷ் என்பவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தமைக்காக மார்க்சிஸ்ட் கட்சியினர் அவரைக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு தலசேரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து ; 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Spread the love