155
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்திலுள்ள பல முகாம்களில் தங்கியிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 1984ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து 3.04 இலட்சம் பேர் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றிருந்தனர்.
இந்தநிலையில் தற்போது இலங்கையில், போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பலர் இலங்கைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.அந்தவகையில் தற்போது தமிழத்தின் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் 61 ஆயிரத்து 422 அகதிகள் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love