தனிநாட்டு கோரிக்கை இன்று காலாவதியாகி விட்டது என தாண் எண்ணுவதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றின் முக்கிய கேள்வி பதில்கள் சிலவற்றிற்கு பதில் அளித்தார்.
அதில், விஜயகலா எம்பி மீண்டும் புலிகளையும், தனிநாட்டு கோரிக்கையையும் தட்டி எழுப்புகிறாரா? என கேட்கப்பட்ட கேளிவிக்கு பதில் அளித்த அவர்,
உண்மையில், வடகிழக்கு மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டதாக அறிவித்து விட்டார், இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனே வந்து அழைப்பு விடுத்தாலும், தமிழர்கள் தனிநாட்டு கோரிக்கையை இனி முன்னெடுப்பார்கள் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில், ஆயுத போராட்டம் மீண்டும் வெடிக்காது என்கிறீர்களா? எனக் கேட்கப்பட்ட மற்றும் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர்,
நிச்சயமாக. இனி ஜனநாயகம்தான். ஆயுதம் தூக்குவோம் என எவராவது அழைப்பு விடுத்தால், பொலிஸ், இராணுவம் வர முன் மக்களே தடியெடுத்து விரட்டுவார்கள் என நினைப்பதாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.