எரித்திரியாவும் எத்தியோப்பியாவும் பல ஆண்டுகால பகைமைக்குப்பின் மீண்டும் ராஜ்ஜிய உறவை புதுப்பித்துள்ளன. ஆபிரிக்க நாடுகளான இரு நாடுகளுக்குமிடையில் 1990 ஆம் ஆண்டு முதல் எல்லை தொடர்பாக மோதல் இடம்பெற்று வந்தது. இந்த மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் 2000 ஆம் ஆண்டு இரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்த போதும் அதன் பின்னரும் இரு நாடுகளுக்குமிடையே கருத்து வேற்றுமை நிலவி வந்தது.
இந்நிலையில் எத்தியோப்பியப் பிரதமர் அபே அகமட் (Abiy Ahmed) உம், எரித்ரிய ஜனாதிபதி இசாய்ஸ் அபெர்க்கி (Isaias Afwerki) யும், எரித்ரியாவின் தலைநகர் அஸ்மாராவில் சந்தித்து ராஜ்ஜிய உறவைப் புதுபித்துள்ளனர்.