189
பிரிட்டிஷ் கிரான்ட் பிறிக்ஸ் போட்டியில் பெராரி அணியின் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் விட்டல் வென்றுள்ளார். மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய வீரரான லூயிஸ் ஹமில்டன், இரண்டாமிடத்தையும் பெராரி அணியின் பின்லாந்து வீரர் கிமி றைக்கோனன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
அந்தவகையில், இவ்வாண்டு போர்மியுலா வன் சம்பியன்ஷிப்புக்கான போட்டியில் 171 புள்ளிகளுடன் முதலிடத்தில் விட்டல் காணப்படுவதுடன், விட்டலை விட எட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள ஹமில்டன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love