Home இலங்கை புலிகளின் காலம் பற்றிய விஜயகலாவின் கூற்று மக்கள் மனங்களின் பிரதிபலிப்பே – (காணொளி இணைப்பு)

புலிகளின் காலம் பற்றிய விஜயகலாவின் கூற்று மக்கள் மனங்களின் பிரதிபலிப்பே – (காணொளி இணைப்பு)

by admin

மாகாண சபையிடம் எஞ்சியிருக்கும்  அதிகாரங்களையும் பிடுங்கி எடுப்பதிலேயே அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்… 

இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பலரும், மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில்  அவரது அலுவலகத்தில் இன்று(10) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,

வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. கொள்ளை, கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் அங்கு இடம் பெற்று வருகின்றன.

குறித்த குற்றச் செயல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதன் பின்னனியை அரசும், காவற்துறையினரும், வேண்டும் என்றே அமைதியாக பார்த்துக்கொண்டு இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.

ஆகவே ஒரு நிகழ்ச்சி நிரலினுடைய பின்னனியிலே குற்றச் செயல்கள் இடம் பெறுவதாக சந்தேகிக்க பட வேண்டிய நிலை உள்ளது.

அண்மையில் கூட ஆறு வயது சிறுமி மற்றும், 60 வயதுடை வயோதிப தாய் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில்,சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்களுக்கு மக்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன் ஒரு வெளிப்பாடவே அண்மையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூட விடுதலைப்புலிகளின் உருவாக்கம் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்து பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

அவருடைய கருத்தின் படி ‘விடுதலைப்புலிகளினுடைய காலத்தில் இருந்த சட்டம்,ஒருங்கு கூட இப்போது இல்லை’ என்ற தோற்றப்பாட்டை உறுவாக்கியுள்ளது.

இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினால் விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து எந்த அளவுக்கு பாரதூரமாக மத்திய அரசாங்கத்தினால், பாராளுமன்றத்தினால் பூதாகாரமாக எடுத்து பார்க்கப்படுகின்றது என்பதற்கு அப்பால் இவ்வாறான ஒரு மன நிலை அதாவது ‘விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு விடுதலைப்புலிகளினால் தான் இவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்’ என்ற சிந்தனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஏற்பட்டிருப்பதை விட அங்குள்ள மக்களின் மனங்கயில் இருந்து உருவாக்கப்படுகின்றதா? என்பதனை அரசாங்கம் கவனமாக பார்க்க வேண்டும். மக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றதே மிகவும் முக்கியமான விடையமாக இருக்க வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 10, 2018 - 8:13 pm

Yes his verse was true. One thing no one could not deny that under the LTTE’s clandestine rule there were no more rape or any other atrocious criminal offences reported under their regime ruled over northern lands of Sri Lanka due to their seviour punishments just on the spot execution no mercy at all who ever found guilty over those menace.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More