குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
புலம்பெயர் தமிழர்களின் பிரதான தலைவரான இந்திய பேராசரியர் போல் நியூமன் மன்னார் மனிதப் புதைக்குழி சம்பந்தமாக ஆய்வு நடத்த இலங்கை வந்துள்ளதாக தெற்கின் நாளிதழ் கூறுகிறது.மன்னார் மனிதப் புதைக்குழி இருக்கும் பகுதிக்கு, வடக்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பேராசிரியர் நியூமனை இரகசியமான அழைத்துச் சென்றுள்ளதுடன் காவற்துறையினர், இது குறித்து புலனாய்வு பிரிவினருக்கு தெரிவிக்காது மறைத்துள்ளனர் என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
போல் நியூமன் மன்னார் மனிதப் புதைக்குழி குறித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதுடன் அந்த இடத்தில் இராணுவ முகாம் இருந்துள்ளதாக கூறியுள்ளார். தான் மன்னார் சென்றதாகவும் அவர் மனித உரிமை பேரவையில் கூறியுள்ளார் எனவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.