ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் ஒக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்அமைச்சர் நவீன் பட்னாயிக் உத்தரவிட்டுள்ளார்.
காணொளி காட்சி மூலம் மக்களிடம் நேரடியாக இன்று உரையாற்றிய முதலமைச்சர் அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காந்தி ஜெயந்தி தினமான ஒக்டோபர் 2 ம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும் அனைவரும் வீடுகளில் மரக்கன்று நடுமாறும், அதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்