144
ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவனொருவன் யாழ் நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து இந்த சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று காவற்துறையினரால் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்துள்ள காவற்துறையினர், பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love