ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை விலகுவதாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரெக்சிற் நடவடிக்கைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பரித்தானயா பல விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்கின்றது எனத் தெரிவித்து பிரெக்ஸிற்றின் செயலாளர் டேவிட் டேவிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் பதவிவிலகியிருந்தனர்.
இந்தநிலையில் மேலும் பென் பிராட்லி (Ben Bradley ) மற்றும் மரியா கோல்பீல்ட் (Maria Caulfield ) ஆகிய 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக தாங்கள் பதவி வலகுவதாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரெக்ஸிற் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் இவ்வாறு பதவி விலகி வருவதால், பிரெக்ஸிற் விவகாரம் திட்டமிட்டபடி இடம்பெறுமா என கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.