குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இந்த நாட்டின் இளைஞர்கள் யுவதிகள் , மக்களே மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது.
நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இனைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. அதனால் தீவிரவாதிகளை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம். என தெரிவித்தார்.