Home இலங்கை சுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

சுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.

யாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் , அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் , சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.

எனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர்; விரைந்து கைது செய்ய வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 12, 2018 - 8:22 pm

First all youths should be employed. Who ever loitering should be punished first. Though Sri Lankan government making more and more avenues over Job opportunities made all those idle mind setters to be engaged some thing. Other wise that idle mind sets will act as a devils work shop ravage our mother land of Sri Lankan again and again. May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More