குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (ஜெகன்) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் அமர்வில் வாக்களிக்கவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் இரட்டைக் குடியுரிமை உடையவர் எனவும் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் விதியை மீறி தேர்தல்கள் ஆணைக்குழுவும் யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சார்ந்த கே.வி.குகேந்திரனுக்கு உறுப்புரிமை வழங்கியதை வெற்றும் வெறிதானதும் என உத்தரவிடவேண்டும் என மனு தாரரால் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கும்வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை உத்தரவையிடவேண்டும் எனவும் மனுதாரரால் நிவாரணம் கோரப்பட்டது.
மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இன்று இடைக்காலக் கட்டளையை வழங்கியது.
இந்த மனுவை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் தாக்கல் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.