சீனாவில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டதாக, பிரபல மனித உரிமை செயற்பாட்டாளருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதான கின் யாங்மின் (Qin Yongmin ) என்னும் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு ஊகன் நகரில் உள்ள நடுநிலை மக்கள் நீதிமன்றம் நேற்று இத்தண்டனை வழங்கியுள்ளது. மேலும் யாங்மினின் அரசியல் உரிமைகள் 3 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை தொடர்ந்து யாங் மினுக்கு ஆதரவாக சீன மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கின் யாங்மின் குற்றவாளி அல்ல. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்தார். எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் புகழ்பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கின் யாங்மின், 1990-களில் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஜனநாயக கட்சியை ஆரம்பித்திருந்ததுடன் தனது வாழ்நாளில் 22 வருடங்களை சிறையில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது