லண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் முதலில் நடைபெற்ற போட்டியில அஞ்சலிக் கெர்பர் (Angelique Kerber) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2-வதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ்ஸை செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இந்தநிலையில் இறுதிப் போட்டியில் அஞ்சலிக் கெர்பர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை போட்டியிடவுள்ளனர்.