210
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு இரசாயனத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்று மாலை ஏற்பட்ட இந்த வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து ஏற்ட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு சீனாவில் டியான்ஜின் நகரில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 173 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love