ஆயிரக்கணக்கான செயல்படாத மற்றும் சந்தேகத்திற்குரியவர்களின் கணக்குகளை ருவிட்டர் நிறுவனம் நீக்கியதால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை ருவிட்டரில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அவரது ருவிட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 746 எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது 43.1 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளவர்கள் பின்தொடர்கிறார்கள்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது ருவிட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 17 ஆயிரத்து 503 பேரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது 7.33 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளவர்கள் பின்தொடர்கிறார்கள்.
இதுபோலவே ஏனைய முக்கிய தலைவர்கள் பலரின் ருவிட்டர் கணக்கில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.