பாகிஸ்தானில் ஒரேநாளில் தேர்தல் பிரசாரங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்றையிதினம் மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 முதல் 10 கிலோ எடைகொண்ட வெடிபொருள் வெடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதேவேளை வடக்கு வாஜிரிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 உயிரிழந்துள்ள நிலையில் ஒரேநாளில் 133 பேர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது