குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும் அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மாவட்ட ரீதியாக காணாமற் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்றது. இதற்கமைய இன்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமற் போனோரின் உறுவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் காணாமற் போனோரின் உறவினர்கள் வீரசிங்கம் மண்டபம் முன்னாள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க ப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை.
அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனத் தெரிவத்து கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.