170
ஆந்திராவில் நேற்று மாலை பயணிகள் படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 6 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப்பணியினர் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து 25 பேரை மீட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love