உள்ளுர் சமூக பண்பாடுகள், பொருளாதார நிலமைகளை வலுப்படுத்தும் நோக்கிலான தொழில் முனைவாக கைத்தறி நெசவுப் பண்பாடு அமைகின்றது. ஆயினும் சமூகப் பண்பாட்டு பொருளாதார மேலாதிக்கம் காரணமாக மேற் குறிப்பிட்ட ஆக்கப் பூர்வமான நிலமைகள் மிகவும் கடுமையான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இயற்கை அனர்த்தங்கள், கல்வி, போர்ச்சூழல், வெகுசனத் தொடர்பூடகங்கள் விளம்பரங்கள் போன்றன. இத்தகைய பின்னனிகளில் மட்டக்களப்பின் உள்ளுர் கைத்தறி நெசவுத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாற்றல்கள், உருவாக்கத் தி;றன்கள் என்பனவற்றை கொண்டாடவும் உள்ளுர் தொழிற் துறையாக கைத்தறி நெசவின் மீள் எழுச்சியை நோக்கிய பயனமாக அமைகின்றன. இதுவே சமூகங்களின் தேவையாக இருக்கின்றது.
சூழலுக்குப் பொருத்தமானதும் தேகத்துக்கு உகந்ததும், உள்ளுர் அலங்கார வடிவமைப்புக்களைக் கொண்டதுமான ஆடைகள் மற்றும் கைத்தறி நெசவுத் துணிகளில் உருவாக்கப்பட்ட அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் என்பவற்றை உள்ளுர் மக்கள் பயன்படுத்தும் பண்பாடாக உருவாக்குவதும் நெசவுப் பண்பாட்டை வலுப்படுத்துவதும் மற்றும் வெகுசனமயப்படுத்தும் நோக்கிலும் உள்ளுர் தொழிற்துறையாக வளர்ச்சி பெற்றுவருகின்றது.
கைத்தறி நெசவுப் பண்பாடானது கிபி 6ம் நூற்றாண்டு முதலான பழமை வாய்ந்தது. 100 வருட பழமை வாய்ந்த குடிசைத் தொழிலாக ஆரம்பமாயுள்ளது. விஜயன் வருகையும் யுத்த தந்திரமும் கொண்ட காலத்தினை நோக்கும் போது 2500 வருடங்களுக்கு முன் குவேனி நூல் நூற்றல் பற்றி இலங்கை சரித்திரம் கூறுகின்றது. அதாவது விஐயன் வருகைக்கு முன் நெசவின் ஆரம்பம் பற்றி அறிய முடிகின்றது. மகாகாலசேன எனும் இனத்தவர்கள் இயக்கர் குழுத்தலைவனின் திருமணத்தில் நிராயுதபாணியான குழுவினரை எளிதாக கொலை செய்த குழுவின் விஐயன் இயக்காகளின்; ஆடைகளை அணிந்து கொண்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1148 – காலிகால சாகித்திய சரவஞ்ச பண்டித பராக்கிர மன்னன் பிக்குகளுக்கு நெசவிலான 80 அங்கிகளை தானமாக வழங்கியமை அதாவது தம்பதெனியாவை ஆட்சி செய்த மன்னன் காலிகால சாகித்திய சரவஞ்சக பண்டித பராக்கிரமபாகு பிக்குகளுக்கு நூல் நூற்று 80 அங்கிகளைத்தைத்து நிறம் ஊட்டிக் கொடுத்தான். மேலும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பருத்தி துணி ஏற்றுமதி செய்தமை பற்றிய குறிப்புகள் – பராக்கிரமபாகு மன்னன் சிவுர என அழைக்கப்படும் துணியினை தயார் செய்தமை பண்டைய இலங்கையில் பருத்திச் செடிகள் நடப்பட்டமைக்கான குறிப்புகள் – ரொபட் நொக்ஸின் எதாஹெலதிவ என்ற நூற்குறிப்பு 1970களிலான திறந்த பொருளாதார கொள்கையின் அறிமுகம் போன்றன கைத்தறி நெசவு வரலாற்றையும் சான்றையும் பற்றி விபரிக்கின்றது.
மட்டக்களப்பு கைத்தறி நெசவுப் பண்பாடு பற்றி நோக்கின் கைத்தறி நெசவும் இயற்கைச் சாய வகைகளும் இணைந்ததான அடையாளத்தை விட்டு மட்டக்களப்பு கைத்தறி நெசவுப் பண்பாடு பற்றி அறிய முடியாது. மட்டக்களப்பு சுயசார்புத் தொழில்கள் பாரம்பரிய கலைகள் என தனித்துவம் கொண்டது. தொன்று தொட்டு கைத்தறி நெசவினை பாரம்பரியமாக செய்து வந்த மாவட்டம் மட்டக்களப்பு இதற்கு கைத்தறி திணைக்களம், நிறுவனம், பாடசாலைகள், விற்பனை நிறுவனங்கள் உறுதிப்படுத்துகிறது. செங்குந்தர் எனப்படும் கைக்கோளச் சாதியினர்(சோழர் காலத்தில் இலங்கையில் குடியேறியவர்கள் என செங்குந்தர் பிரபந்தம் கூறுகின்றது) குலத் தொழில் அடையாளப்படுத்துகின்றது.
மேலும் கைத்தறி நெசவின் உத்தி முறை பற்றி நோக்கின் பருத்தி பட்டு மூலப் பொருட்களை இந்தியாவில் இருந்து பெற்று பா ஓடுதல் செய்து பின் பா ஓடிய நூல்களுக்கு கஞ்சியிடுவர்பின் அவை காய்ந்த பின் சாயம் இடுவர் ஆரம்பத்தில் கிண்ணை கண்ணா தாவர வேர்களில் இருந்து சாயம் பெறப்பட்டது.
தற்போது செயற்கைச்சாயம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது இரசாயனச்சாயம், உப்புச்சாயம் போன்றனவாகும். இரசாயனச்சாயம் மங்காது. இதன் வகைகளாக அமில, மூல, குறோம் கந்தக, அசிட்டேட்டுச்சாயம் போன்றனவாகும். ஆரம்ப காலத்தில் குழித்தறி முறைகள் காணப்பட்டது. தற்போது பேட்டுப் பொறி, இலற்றிசுப்பேட்டுப் பொறி காணப்படுகின்றது.
நெசவு வகைகளாக
வைர சரிவுக் கோட்டு நெசவு
கிரட்சைசேனை கோட்டு நெசவு
சேர்ந்த சரிவுக் கோட்டு நெசவு
அலங்கார சரிவுக் கோட்டு நெசவு
போலி வலைக்கண் சரிவுக் கோட்டு நெசவு
முறுக்கு நெசவு
அழகுப்புள்ளி
இரட்டைச்சீலை போன்றன.
நெசவுக்கற்றலாக பொது அறிவு, மெசினறி இயந்திரம், நெசவுக்கணிதம், டிசைன் போன்ற பாடப்பரப்புக்கள் அமைகின்றது. கைத்தறியில் பெண்கள் பற்றி ஆராயும் போது நாசாப்பூரில் நூல் திரிப்பவர்கள் எனும் தலைப்பில் மரியா மைஸ் என்ற ஆய்வாளர் பால் ரீதியான வேலை பிரிப்பிற்கும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்குமிடையிலுள்ள தொடர்பினை விளக்குகிறார். ஹென்றின் நாமூரின் ‘பெண்ணிலைவாதமும் மானிடவியலும்’ என்ற நூலிலும் கைத ;தறி வேலைகளில் ஈடுபடும் பெண்கள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சம் சுயாதீனமான சந்தை முறைகளை ஏற்படுத்தல் என்பது இயலாத காரியமாக உள்ளது பெண்கள் ஸ்தாபனமாதல் அல்லது ஒன்று சேர்தல் கடினம், உழைப்பு அதிகம் – வறுமானம் குறைவு நிச்சயிக்கப்பட்ட விலை, சந்தைப்படுத்தல் தொடர்பில் தெளிவின்மை போன்றன.
கைத்தறி தொழில் முனைவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் பற்றி நோக்கின் கைவேலை செய்வோரின் பெயர்கள் மருவி விற்பனையாளர்களின் பெயர்கள் போற்றப்படல், என்பதும் தரம் குறைவு என்ற அர்த்த புலம், முக்கிய மூலப் பொருட்களை வழங்கும் மரங்கள் பாரிய மூடநம்பிக்கை கருத்தியல் மூலம் அழிக்கப்படல் போன்றன
மேலும் அனுமதிக்கானப் பிரச்சினை (இயற்கை மூலப் பொருட்களை கொள்வனவு செய்தல், ஊழைக்கும் மக்களாக இருந்து மாறி வழங்கும் மக்களாக மாறியுள்ளோம், பெண்களிடம் தமது சுய புத்தியையும் சும பலத்தையும் உணரும் விழிப்புணர்வு இல்லாமை, நாகரீகம் என்ற பெயரில் பாரம்பரிய தொழில் உத்திகள் மருவிச் செல்லல், நவீன தொழிநுட்ப முறைகளால் கவரப்படல், உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை, திணைக்களங்கள் மூலமான ஊக்குவிப்புகள் சலுகைகள் போதாமை, அனேகமான நெசவுத்துறை தனியாரிலும் அரசசாரா சமூக நிறுவனங்களிலும் பல்தேசிய கம்பனிகளிலும் தங்கியிருத்தலும் மூல வளங்களை நாடி நிற்றல், அபிவிருத்தி பனிகள் காலம் கடந்து செல்லல், தமது சூழல் பற்றிய விழிப்புணர்வு இன்மை, உள்நாட்டு யுத்தம், இனப்படுகொலை, புலம்பெயர்தல் இயற்கை அனர்த்தங்கள், சந்தைப்படுத்தல் வசதியின்மையும் அதைப் பற்றிய தெளிவின்மையும் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
எமது உற்பத்திகளை மேம்படுத்துவோம் எமது உற்பத்தியில் பெருமை கொள்வோம் எமது பண்பாட்டின் நல்வேர்களில் புதியவற்றை ஆக்குவோம் உற்பத்திகளையும் நுகர்வையும் முடிந்தளவு எம்மிடையே வைத்துக் கொள்வோம் என்ற திடமான சிந்தனைத் தளத்தோடு நாம் இணைதல் மிக அவசியமானது.