ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில அமைந்துள்ள சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகின்ற நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவானோர் அங்கு நின்றிருந்தவேளை திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.