ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை சென்றடைந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் உத்தியோகபூர்வமாக சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஸ்யாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்ட நிலையில் 3-வது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் இன்று ( ஜூலை 16-ம் திகதி ) பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஹெல்சின்கி நகரை ட்ரம்ப் சென்றடைந்துள்ளார்.