Home இலங்கை மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்

மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடுமையான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது மற்றும் மரண தண்டனையை நிறைவேற்று அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பு ஆகியன குறித்து தற்போது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முதிய பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுமாயின் ஊதியம் பெறாமல் அலுகோசு பதவியை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக சிலாபம் ஆராச்சிக்கட்டு பகுதியை சேர்ந்த எல்.பீ. கருணாவதி என்ற 71 வயதான பெண்மணி தெரிவித்துள்ளார்.

பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்து நாட்டின் எதிர்கால சந்ததியை அழிக்கும், கடத்தல்கார்களை தகுதி தராதரம் பாராது அழித்தொழிக்க வேண்டும் எனவும் கருணாவதி கூறியுள்ளார். அத்துடன் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்மத்தின் தீவாக விளங்கிய இலங்கை மரணத்தின் தீவாக மாற எந்த வகையிலும் இடமளிக்க முடியாது எனவும் கருணாவதி கூறியுள்ளார்.

Spread the love

Related News

1 comment

K.Ranjithkumar July 16, 2018 - 7:37 pm

I salute our mother of this Sri Lankan lady over 71 Yrs. I am fully support your stance amma. My first salute to you over execution of those death sentence in Sri Lanka. By giving seviour punishment of those menace full criminals who ever ply over our mother land of Sri Lanka. May God bless mother Sri Lanka.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More