குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் படியில் ஈடுபட்டு இருந்த இந்திய மீனவர்களிடம் இருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டு உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற் சுற்று பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த மீனவர்களை கைது செய்து அவர்களது படகினை சோதனையிட்ட போது படகில் இருந்து 37கிலோ கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் , அவர்களிடம் இருந்து மீட்கபட்ட படகு மற்றும் கஞ்சா ஆகியவற்றை தெல்லிப்பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள வெளிநாட்டு படகுகளை ஒழுங்குபடுத்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.